2024 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விண்ணப்பம் தொடர்பான அனைத்து தகுதிகளும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி அன்று செல்லுபடியாகும் வகையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் 

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிவித்தல்! | Ministry Of Education New Announcement

அதேவேளை, கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட உரிய விண்ணப்பங்களை நிரப்பி கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் பாடசாலை அதிபர்களிடம் சமர்ப்பிக்குமாறு மாணவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.