கிழக்கு செல்வநாயகம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வா அவர்களின் 125 வது ஜெயந்தி தினம் நிகழ்வு கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் 16.12.2023 சனிக்கிழமை காலை தந்தை செல்வாவின் பேரன் சட்டத்தரணி சா.செ.ச இளங்கோவன் அவர்களின் முன்னிலையில்  அட்டாளைச்சேனை சர்வமதத் தலைவர் ஷாஹிம் ஷாலிஹ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது


கலாசார வரவேற்று நடனங்களுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு முதலில் தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு அதிதிகளினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நினைவுப் பேருரையினை  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி அனுசூயா சேனாதிராஜா அவர்கள் நிகழ்த்தினார் நிகழ்வில் அம்பாரை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் த.கலையரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சின் முக்கியஸ்தர்கள்,சர்வமதத்தலைவர்கள் சிவில் சமூகஏற்பாட்டாளர்கள்  எனப் பலரும் கலந்துமை  குறிப்பிடட தக்கது